கே.எஸ்.எப்.எம் பவுண்டேசன்

(காலப்பறவை ஸ்டாலின் பெலிக்ஸ் மத்தியாஸ் பவுண்டேசன்)

தமிழ்நாட்டில் குமரிமாவட்டம் – பள்ளியாடி – குமரித்தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த ஊர். இங்குள்ள மூரியங்கோணத்தில் 16-11-1980 – ல் தமிழ் ஆர்வலர் திரு.மத்தியாஸ் திருமதி.மரியம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார் திரு.ஸ்டாலின் பெலிக்ஸ்.

நாகர்கோவில், சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுச் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றினார். மேலும் வரலாறு மற்றும் வணிக நிர்வாகவியல் கல்வியில் முதுகலைப்பட்டமும் பெற்றிருந்தார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட ஸ்டாலின் பெலிக்ஸ், கல்லூரியில் பயிலும் போதே தாய் மொழி மீதும், தமிழ்  அமைப்புகள் மீதும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

சிறந்தச் சிந்தனையாளராக, சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய இவர் கல்வி, மருத்துவம், இரத்த தானம் எனத் தன்னால் இயன்ற உதவிகளை நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும் செய்து வந்தார்.

நோக்கம்

நலத்திட்டச் செயல்பாடுகள்

நலத்திட்டச் செயல்பாடுகள்

கல்வி, மருத்துவம் சார்ந்த நலத்திட்டச் செயல்பாடுகள் செய்தல்.

நல்வாழ்வுக்குப் பாடுபடுதல்

நல்வாழ்வுக்குப் பாடுபடுதல்

குழந்தைகள், இளைஞர்கள், ஆண், பெண், மூத்தகுடிமக்கள் நல்வாழ்வுக்குப் பாடுபடுதல்.

வறுமையைப் போக்குதல்

வறுமையைப் போக்குதல்

விளிம்புநிலை வாழ்வோரின் வறுமையைப் போக்க, சாதி, சமய, பால் வேறுபாடின்றி உழைத்தல்.

சமூக முன்னேற்றம்

சமூக முன்னேற்றம்

லாப நோக்கின்றி நூறு விழுக்காடு சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுதல்.

பணிகள்

  • ஸ்டாலின் பெலிக்ஸ் பிறந்த நாளையொட்டி முரசங்கோடு குழந்தைகள் காப்பகத்திற்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன.
  • சேரிக்கடை விதவைப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
  • ஏழைக் குழந்தை மருத்துவம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிட்சைச் செய்தவருக்கான மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
  • தொற்காள் குழந்தைகள் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • முளகுமூடு மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்ணுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.